சிறிலங்கா பேரினவாத அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பிற்கெதிராக அனைத்துலக நாடுகளை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழரின் தன்னாட்சியுரிமையினை ஏற்றுக்கொள்ள வேண்டியும் நேற்று 3.09.2014 மதியம் 12 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் இருந்து ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

தமிழின அழிப்புக்கு நீதி கேட்கும் முகமாக ஆரம்பித்திருக்கும் இப் பயணத்துக்கு முன்னர் தியாக தீபம் திலீபன் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தி சுடர் ஏற்றி , அக வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

bilde-5

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் , பிரான்சில் இருந்து திரு குணம் அவர்களும் , அவருக்கு ஆதரவாக பெல்ஜியம் நாட்டில் இருந்து திரு மக்ஸ் அவர்களும் மிகவும் உறுதியோடு தமது மாந்தநேய பயணத்தை ஆரம்பித்தனர் .இவ் ஆரம்ப நிகழ்வில் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்

அதை தொடர்ந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகளும் , மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரத்துறையை மற்றும் , சிறிலங்காவிற்கான பிரதிநிதியையும், சிறிலங்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான அதிகாரியுடனும் முக்கிய சந்திப்புகளை நடாத்தினர்.

bilde-3

இச் சந்திப்பின் போது ஈழத்தமிழர்களின் இன்றைய வாழ்வியல் சூழலை எடுத்துரைத்ததோடு ,தமிழின அழிப்பு பல்வேறு கோணங்களில் இன்றும் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதையும் அவர்களின் கருத்துக்கு கொண்டுசென்றதோடு , ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா மீது மேலதிக அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் ஐரோப்பிய யூனியனின் மனிதவுரிமை கமிஷனின் பிரதிநிதி, மற்றும் பசுமை கட்சி பிரதிநிதிகளுடனும் சந்திப்புகள் நடைபெற்றது.இச் சந்திப்பில் ஈழத்தமிழர்களுக்கு நடைபெறும் இன அழிப்பை தடுத்து நிறுத்துவத்துக்கு , ஈழத்தமிழர்கள் தம்மை தாமே ஆளும் வகையில் அவர்களுக்கான அரசியல் தீர்வான அவசியத்தை வலியுறுத்தப்பட்டது.

bilde-2

இன்றைய தினம் தமது ஐநா நோக்கிய தமிழின அழிப்புக்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தை தொடர்ந்து நாமூர் நகரத்தை நோக்கி மேற்கொள்ள இருக்கின்றனர் .இவர்களை தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுக்கு பின்வரும் இலக்கங்களை தொடர்புகொள்ளவும் :
+32 488328941

Fur further Information / மேலதிக தொடர்புகளிற்கு
www.walkforjustic.com
www.tamilvan.com
www.facebook.com/WalkForJustice2014
www.youtube.com/user/tamilvan2013
www.twitter.com/tamilvan