தமிழின அழிப்பிக்கு நீதி கிடைக்கும் பொருட்டு கடந்த 3.09.2014 அன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் யேர்மன் , Saarbrücken நகரை வந்தடைந்து , தொடர்ந்து மாலை நேரம் பிரான்ஸ் எல்லப்பகுதியை நோக்கி நகர்ந்து சென்றது .

நேற்றைய தினம் Saarbrücken நகரில் தமிழ் மக்கள் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் திரு குணம் மற்றும் செல்வன் மக்ஸ் அவர்களை சந்தித்தனர் .

இன்றைய தினம் பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் வகையில் பிரான்ஸ் நாட்டு தமிழ் உறவுகள் அவர்களை வரவேற்க இருக்கின்றனர் . தொடர்ந்து அங்கு நகரபிதாவுடனும் சந்திப்பு நடைபெற இருக்கின்றது .

எதிர்வரும் 15.09 அன்று நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு அனைத்து ஐரோப்பிய தமிழ் மக்களும் கலந்துகொள்ளும் படி கடந்த ஐந்து நாட்களாக விடுதலைக்கு உரம் சேர்க்கும் ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் வேண்டிக்கொள்கின்றனர் .