எல்-4 நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த ஆண்டு அகரம் எனும் கணனித்தமிழ் குறும்தகட்டினை வெளியிட்டு தமிழ் அறியும் முயற்சியை விளையாட்டின் மூலம் ஏற்படுத்தி இருந்தார்கள்.

புலம்யெர்ந்த மண்ணில் குழந்தைகள் விளையாட்டோடு தமிழ்மொழியை அறிந்து கொள்ள இலகுவாக அமைக்கப்பட்டிருந்தது.இந்த முயற்சிக்கு மக்களின் பாராட்டும் கிடைந்திருந்தது.

மீண்டும் இவ்வாண்டு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப iOS (iPod , iPhone , iPad android high end devices (E.g: Samsung S4 or higher , tabs ) ஆகியவற்றில் விளையாடக்கூடிய Tamil game 3D ஜ கன்னி முயற்சியாக உருவாக்கி இலவசமாக முன்வைத்துள்ளார்கள் அதனை தரவிறக்கம் செய்து படைப்பாளிகளுக்கு உங்கள் ஆதரவினை தெரிவித்துக்கொள்வதோடு ஆரோக்கியமான கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

தாயகத்தில் தமிழ்மொழியை எதிரிகள் அழிப்பதர்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் புலத்தில் தமிழை தொழில்நுட்பத்தோடு இணைத்து தமிழை வளர்க்கும் பணியானது பாராட்டுதலுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய விடயம்
எனவே அன்பான உறவுகளே கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி தரவிறக்கம் செய்து உங்கள் குழந்தைகளுக்கு தமிழை ஊட்டி தமிழைக்காப்போம்.
App Store : https://itunes.apple.com/gb/app/tamil-game-3d/id909956193?mt=8

Google Play : https://play.google.com/store/apps/details?id=com.el4.Tamilgame

or search : tamilgame

www.el-4.com