இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ , இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் , ஓவியர் வீரசந்தானம் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றினர்.

மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா , அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி , முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.