தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 6 வது நாளாக நேற்றைய தினம் பிரான்ஸ் யேர்மனியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்குள் வந்தடைந்தது . நேற்றைய தினம் பிரான்ஸ் நாட்டில் இருந்து மேலதிகமான ஒரு மனிதநேய செயற்பாட்டாளர் ஈருருளிப்பயணத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார்.

நேற்றைய மதிய நேரம் அப்பகுதியில் உள்ள நகரமன்றத்தோடு அரசியல் சந்திப்பு நடைபெற்றது . அச் சந்திப்பில் ஈருருளிப்பயணத்தின் நோக்கத்தை எடுத்துரைத்ததோடு, தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த சர்வதேச குமூகம் உடனடி நடவெடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணிக்கு உலகத்தமிழ் மக்களை தயாராகும் படி ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் உறவுகள் மூவரும் கேட்டுக்கொள்கின்றனர் .

ஆயிரம் ஆயிரமாக மக்கள் திரள அனைத்துலக குமூகம் தொடர்ந்தும் மௌனம் சாதிக்க முடியாது. ஒவ்வொரு தமிழனும் இப் பேரணியில் குடும்பமாக கலந்து கொண்டு பேரணியை வெற்றிபெற செய்ய வேண்டும்.இன அழிப்புக்கு நீதி கேட்கவும் தமிழீழ விடுதலையை அங்கீகரிக்கவும் கோரி நிகழ்கின்ற இந்தப் போராட்டம் மாபெரும் எழுச்சிப் போராட்டமாக வெற்றியடைய வேண்டும் .