வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் குறித்த தகவல்களை திரட்டுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வடகிழக்கு இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இராணுவத்தினர் வடக்கில் அனைத்து விதமான தகவல்களையும் திரட்டி வருகின்றனர்.

குறிப்பாக இஸ்ரேலிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனி நபர்களின் உடல் மொழியையும் கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து வெறும் கருத்துக்களை வெளியிட்டு வருவதால் பலன் இல்லை.

எனவே வடக்கு கிழக்கில் எத்தனை இராணுவத்தினர் இருக்கின்றனர், அவர்கள் எவ்வளவு காணிகளை ஆக்கிரமித்துள்ளனர், அவர்களின் குற்றச் செயல்கள் போன்ற விடயங்களை கண்காணிக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.