தமிழின அழிப்புக்கு நீதி கோரி , தமிழ் மக்களின் அவலக் குரலை எண்திசைக்கும் பரப்பும் பொருட்டு ஐநா வை நோக்கிய ஈருருளிப்பயணம் ஏழாவது நாளாக இன்று பிரான்ஸ் நாட்டின் ஊடாக நாளை மாலை சுவிஸ் நாட்டுக்குள் செல்ல இருக்கின்றது . ஈருருளிப்பயணம் செல்லும் வழிகளில் நகரங்களின் நகரபிதாவுடனும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டது .

சந்திப்பில் ஈருருளிப்பயணத்தின் கோரிக்கைகளை முன்வைத்து ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை அனைத்துலக குமூகம் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.