விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்தியவர் தளபதி பால்ராஜ் அவர்கள். N24A5580
தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கியர். N24A5598

புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவாக கடந்த 07.09.2014 ஞாயிற்றுக்கிழமை, இளந்தளிர் விளையாட்டக்கழகம் துடுப்பெடுத்தாட்டப்போட்டியை நடாத்தியிருந்தார்கள்
இப்போட்டியில் இளந்தளிர் விளையாட்டக்கழகம் முதலாம் இடத்தையும் அஸ்கார் பாரும் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தையும் young bluesமூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.N24A5588