பொய்யான பரப்புரைகள் மெய்யை உடைத்துவிடும் September 10, 2014 News தாயகம் சென்று சொந்தங்களை பார்த்துவிட்டு வருபவர்கள் அங்கு பிரச்சனையே இல்லையென வாய் கூசாமல் கூறுவது ஒரு இனத்தின் விடுதலையை முடக்கிவிடும் என்பதை சிந்திக்கவேண்டும் வெளிநாட்டு பிரயா உரிமையை பெற்றுக்கொண்டு நாடுசென்று வருகின்ற எவருக்கும் எந்த பிரச்சனையும் வருவதில்லை என்பதர்க்காக காலம் காலமாக ஒடுக்கப்பட்டு இன அழிப்புக்கு ஆழாகிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வுக்காக எழுப்பப்படும் உரிமைக்குரலை தெரிந்தோ தெரியாமலோ நசுக்கிவிடாதீர்கள். சிறீலங்கா பேரினவாத அரசானது புலம்பெயர்ந்த மக்களின் வாய்மொழியால் சிறீலங்காவில் பிரச்சனை இல்லை என்பதை மேற்கு தேசங்களில் பதிவு செய்யவிரும்புகின்றது. காரணம் புலம்பெயர்ந்த மக்களின் அரசியல் செயற்பாட்டின் பலம்தான் இன்று சிறீலங்காவை கதிகலங்க வைத்திருக்கின்றது. ஆகவே புலம்பெர்ந்த அரசியல் செயற்பாட்டின் பலத்தை உடைத்தெறிந்து தன்னை இன அழிப்பு குற்றத்தில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முனைகின்றது சிறீலங்கா,இந்த சூட்சுமத்தை மக்கள் புரிந்து கொண்டு சரியான முறையில் பேசவேண்டிய தேவையை புரிந்துகொள்ளவேண்டும். இல்லையேல் எமது மக்களின் விடுதலைக்கு நாங்களே உலைவைப்பவர்களாக மாறிவிடுவோம். நன்றி:TTN