கடந்த 3.09.2014 அன்று தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று 8 வது நாளாக சுவிஸ் நாட்டை வந்தடைந்தது . மாலை 7 மணிக்கு Basel நகரை வந்தடைந்த மனிதநேய செயற்பாட்டாளர்களை Basel நகர மக்கள் வரவேற்றினர்.

துயரத்தின் கடலில் மூழ்கி தவிக்ககூடிய தமிழர்களை கரையேற்றுவதற்காக உலகசமுதாயம் அந்த முயற்சியில் உடனடியாக ஈடுபட்டாக வேண்டும் என்பதற்காக இந்த போராட்டம் ஐ.நா முன்றலை நோக்கி  நடைபெறுகின்றது. இதில் அனைத்து புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டு எங்கள் குரலினை ஓங்கி ஒலிக்க செய்யவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. அந்த கடமையினை செய்ய எதிர்வரும் 15 ஆம் நாள் ஜெனீவா நகருக்கு அனைத்து மக்களும் அணிதிரளவேண்டும்   .

ஐ.நா முன்றலில் அலைஅலையாக கூடுங்கள். உரக்க குரல் கொடுத்து  தமிழர்களின் கோரிக்கையினை உலகிற்கு தெரிவிக்கும் முகமாக ஈருருளிப்பயணம் செல்லும் வழிகளில் உள்ள நகரபிதா மற்றும் ஊடகவியாளர்களை சந்தித்து செல்கின்றது . ஒற்றுமையின் மூலம் துயரக்கடலில் மூழ்கியிருக்கும் தமிழ்மக்களின் விழிகளில்  பெருகும் நீரினை துடைக்க முடியும் என்ற நம்பிக்கையில் திரண்டு வாருங்கள் என்று ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மூவரும் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளாக வைத்துள்ளனர் .

ஈருருளிப்பயண செய்திகள் பிரான்ஸ் உள்ளுர் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது .