ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக இருந்துக் கொண்டு, அதன் கட்டுப்பாடுகளை மீறி செயற்படுகின்ற சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்கும் என்று நம்புவது? என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க வலியுறுத்தி, கடந்த புதன் கிழமை வடமாகாணத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.

இவ்வாறான தீர்மானங்களை நிறைவேற்றுவதால் நாட்டின் நல்லிணக்கம் பாதிப்படையும் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில்வழங்கியுள்ள மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், சர்வதேச விசாரணைக்குழுவை நாட்டுக்குள் அழைப்பதால் நல்லிணக்கம் பாதிப்படையும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். அதேநேரம் சிறிலங்காவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம்.

எனினும் ஐக்கிய நாடுகளால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவை நாட்டுக்குள் அனுமதிக்காமல் செயற்படும் சிறிலங்கா, எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கும் என்று நம்புவது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.