தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று 9 நாட்களை கடந்து Murten நகரை நோக்கி சென்றுகொண்டிருகின்றது.

பயண வழிகளில் மலைப்பிரதேசங்களாக அமைந்திருந்தாலும் பயணத்தை மேற்கொள்பவர்கள் மிக உறுதியோடு ஐநா நோக்கி பயணிக்கின்றனர் .

 

எதிர்வரும் திங்கள்கிழமை நடைபெற இருக்கும் பேரணியில் தமது நீதிக்கான பயணத்தை நிறைவுக்கு கொண்டுவந்து ,தொடர்ந்து மனிதவுரிமை ஆணையகத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர் .

ஈருருளிப்பயணத்தை மேற்கொள்பவர்கள் அனைத்து தமிழ் மக்களையும் இப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு உரிமையோடு வேண்டி நிற்கின்றனர் .