ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த 11 நாட்களாக நடைபெறும் ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப்பயணம் நேற்றைய தினம்  Moudon எனும் நகரத்தில் இருந்து 59 Km தூரத்தை தாண்டி Rolle எனும் நகரத்தை வந்தடைந்தது .

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி  ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயசெயற்பாட்டாளர்களுக்கு செல்லும் வழிகளில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தமது ஆதரவையும் , உதவிகளையும்  கொடுத்து வருகின்றனர் .

எதிர்வரும் திங்கள் கிழமை ஐநா முன்றலில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்  நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் ஈருருளிப்பயணம் நிறைவடைய இருக்கின்றது .
தமிழ் மக்களுக்கான தீர்வு தமிழீழமே எனும் உறுதியோடு ஈருருளிப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயசெயற்பாட்டாளர்கள் மிகுந்த வலிமையோடு சர்வதேச அரசியல் முச்சந்தி நோக்கி பயணிக்கின்றனர் அத்தோடு இப் பேரணியில் அனைத்து ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ளும்படி உரிமையோடு வேண்டி நிற்கின்றனர் .

ஈருருளிப்பயணம் கடந்த நாட்களில் பிரான்ஸ் நாட்டை ஊடறுத்து செல்லும் போது பல  உள்ளூர் பத்திரிகைகளில் இவ் விடையம் சார்ந்து பிரசுரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.