ஆண்டு தோறும் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள் , சமய விழாக்கள், நிகழ்வுகள், பொது அறிவு, தகவற் துளி போன்ற பல விடயங்களைத் தாங்கியவாறு தமிழ்த்தாய் நாட்காட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நாட்காட்டியினை மேலும் சிறப்பாகவும், மக்கள் அறிய விரும்பும் விடயங்களையும் உள்ளடக்கியவாறும் என்றும் இல்லாத புதிய வடிவமைப்புடன் தமிழர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்க வேண்டிய முறையில் உங்களின் கைகளில் தர விரும்புகிறோம்.விசேடமாக இம்முறை ஒவ்வொரு நாளுக்கும்  தேசியத் தலைவரின் சிந்தனைத் துளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது .

அவ்வகையில் எதிர்காலத்தில் எமது தமிழ்த்தாய் நாட்காட்டியை மேலும் சிறப்பாகவும், எமது மக்களுக்கு தேவையான அனைத்து அதிகளவான தகவல்களையும் உள்ளடக்கவும் மக்களாகிய உங்களது கருத்துக்களையும் , தாங்கள் வாழும் நாடுகளில் நடைபெறும் எமது சமய பெருவிழாக்களின் நாட்களையும் அறியப்படுத்துமாறு தங்களிடமிருந்து எதிர்பார்த்து நிற்கின்றோம்.

இத்துடன்  தேசியத்தலைவரின் சிந்தனைத் துளிகளும் புதுவடிவமைப்புடன் 2014 ஆம்ஆண்டுக்கான வெளியீடாக உதயம் பெற காத்திருக்கின்றது .

எதிர்வரும் 10 ஆம் நாள் ஒக்டோபர் வெள்ளிக்கிழமைக்கு (10.10.2014) முன்னர் தங்களது தகவல்களை  கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி; :- thamilthai1976@gmail.com