நாகர்கோவில் பள்ளி மாணவர் படுகொலையின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று September 22, 2014 News நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில் மகா வித்தியாலயம் மீதான இலங்கை விமானப் படையினரின் விமானக் குண்டுவீச்சில் 21 மாணவர்கள் உயிரிழந்த 19 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர்.இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 21 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர். 1995.09.22 அன்று நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது சிங்கள வான் படைகளின் குண்டுவீச்சால் பிச்செறியப்பட்ட பாடசாலை தளிர்கள் கண்ணீருடன் கசியும் இதயத்துடன் …. 01. செல்வன் மயில்வாகனம் கணகநாதன் 02. செல்வன் இராமநாதன் கோபிதரன் 03. செல்வன் சுந்தரலிங்கம் பழனி 04. செல்வன் நாகமுத்து செந்தில்வேல் 05. செல்வன் கிருஷ்ணகுமார் தவசீலன் 06. செல்வன் இராசரத்தினம் உமாகாந்தன் 07. செல்வி அல்போன்ஸ் அமலவிஜி 08. செல்வி இரவிந்திரராசா அமிர்தா 09. செல்வி இராசரத்தினம் கவிதா 10. செல்வி இராமநாதன் மேதினி 11. செல்வி மார்க்கண்டு நாகலோஜினி 12. செல்வி பாலச்சந்திரன் ரஜிதா 13. செல்வி தாமோதரம் சகுந்தலா 14. செல்வி இராமச்சந்திரன் சங்கீதா 15. செல்வி சிதம்பரப்பிள்ளை சசிருபி 16. செல்வி செல்வகுலசிங்கம் செல்வதி 17. செல்வி குகசரவணமலை தர்சினி 18. செல்வி சுந்தரலிங்கம் தர்சினி 19. செல்வி பூலோகராசா துஷாந்தினி 20. செல்வி நவரத்தினசாமி உமாதேவி 21. செல்வி தர்மலிங்கம் துஷந்தினி