GMqg7gOqFrYசென்னையில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான பேரணியில் மகிந்த மற்றும் சுப்பிரமணியன் சாமி கொடும்பாவிகள் எரிப்பு! September 24, 2014 News இன்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டனர்.தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பட்டடில் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இப் பேரணி நடைபெற்றது . இப் பேரணியில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பதைகைளையும், புலிக்கொடிகளைத் தாங்கியவாறு தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் எழுர்ச்சி உடன் பேரணியில் கலந்துகொண்டனர் . பேரணி முடிவடைந்த இடத்தில் மாணவர்களால் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சே மற்றும் தேசவிரோதி சுப்பிரமணியம் சாமி கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. நன்றி:பதிவு