மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்  சிறிலங்கா தொடர்பான வாய்மொழி மூல
அறிக்கையை எமது அமைப்பு வரவேற்கிறது.
மனித உரிமை ஆணையகத்தின் 25/1 (A/HRC/25/1)தீர்மானம் சம்பந்தமான் விரிவான
பொருட்கோடலை /விளக்கத்தைக் கொடுத்தமையையும் நாம் வரவேற்கிறோம்.
குறிப்பாக ,மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவானது
பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடியாக தகவல்களை பெறுவதற்கும் அதனை
வலிமைப்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுப்பதாகக்குறிப்பிட்ட ஆணையாளரின்
அறிக்கையை வரவேற்கிறோம்.

இந்த விசாரணைக்க்கு நேரடி சாட்சியங்களை வழங்கக்கூடிய
மிகப்பெரும்பான்மையானோர் சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில்
வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள் என்பது மனித உரிமை ஆணையாளர் அறிந்ததே.
தொடர்ந்தும் பாதிக்கப்படும் மக்கள் என்றவகையில் இந்த விசாரனைக்கு தமது
சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டுமென்பதில் தமிழர்கள் பெருதும்
விருப்புக்கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் வாழுகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை பதிவு
செய்யாதவிடத்து , அவ்விசாரணை முழுமையானதாகவோ தீர்க்கமானதாகவோ அமையாது .

ஆகவே, பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தமது சாட்சியங்களை நேரடியாக மனித
உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணிக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு ஏதுவான
பொறிமுறைகளை உறுப்பு நாடுகள் முன்வைக்க வேண்டும் என நாங்கள்
கேட்டுக்கொள்கிறோம்.

போரின் போதும் அதன் பின்னரும் வடக்கைப்போலவே கிழக்கும் பாதிக்கப்பட்ட
போதிலும் இங்கு ,இலங்கையின் வடபகுதி பற்றியே முக்கியத்துவம் கொடுத்து
பேசப்படுகிறது.
உதார்ணமாக 2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூர குற்றங்களுக்கு
சமனான குற்றங்கள் 2007 இல் கிழக்கின் வாகரையிலும் நிகழ்த்தப்பட்டது
அத்தோடு வடக்கின் வலிகாமத்தில் நடைபெறும் நில அபகரிப்பு போலவே கிழக்கின்
சம்பூரில் நிகழும் நில அபகரிப்பும் மிகவும் அபாயகரமானதாகும்.

எனவே ,கிழக்கு மாகாணம் பற்றியும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக
விசாரணைக்குழு  போதிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று நாம்
வேண்டிக்கொள்கிறோம்.

தமிழர்கள் ,அவர்களது தமிழர்கள் என்கிற தேசிய அடையாளத்தினாலேயே
தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதை , மனித உரிமைகள்
ஆணியாளரின் வாய்மொழிமூல அறிக்கை குறிப்பிடத்தவறியமையை  நாங்கள் கவலையுடன்
கவனத்தில் கொள்கிறோம்.
குறிப்பாக , (அந்த அறிக்கையில் ) மத சிறுபான்மையினர் இலக்கு
வைக்கப்படுவதை கிற்ஸ்தவர்களும் முஸ்லிம்களும் இலக்குவைக்கப்படுவதாக பெயர்
குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்ற அதே வேளை ,தமிழர்கள் என
குறிப்பிடுவதை தவிர்த்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை தருகிறது
மனித உரிமைகள் ஆணையாளரது வாய்மொழு மூல அறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருப்பதில் பெரும்பான்மையான சம்பவங்கள் ,தமிழர்களின் /
இலங்கைத்தீவில் தமிழ்தேசத்தின் அடையாளத்தை அழித்து அவர்களை
அடிமைப்படுத்தும் ஒரு  கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைப்பொறிமுறையின்
ஒருபகுதியே ஆகும்.
தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும்
புரிந்து கொள்ளல் இங்கு மிகவும் அடிப்படையானது. அந்த அடிப்படையில்
விசாரணைகளைக்கொண்டு செல்லுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவகத்தை நாங்கள்
வேண்டிக்கொள்கிறோம்.