இருபதாம் நூற்றாண்டு முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக திலீபன் ஓவியத்தை செய்து நான் தமிழகத்தில் காட்சிக்கு வைத்தபோதும்,மலேசிய,சிங்கப்பூர்,அமெரிக்கா,கனடா,ஐரோப்பா,மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட போதும் மிகவும் சரியாக உள்வாங்கப்பட்டது. தமிழீழத்தில் ஓவியக் காட்சி நடத்தப்படுவதற்கு முன்பே அண்ணன் பிரபாகரன் அவர்கள் என் ஓவியங்கள் அனைத்தையும் பார்த்து கருத்துக் கூறிக்கொண்டு வந்தவர் “திலீபன்”ஓவியத்தைப் பார்த்ததும்’எப்படி உங்களால் திலீபனின் அந்த கடைசி நொடிப்பொழுதை கொண்டு வர முடிந்தது. அங்கிருந்தபடி எப்படி உங்களால் உள்வாங்க முடிந்தது.ஓவியம் மிக நன்றாக வந்திருக்கிறது.அதற்குரிய வரிகளும் நன்றாக இருக்கிறது’ என்று கூறினார்.’அண்ணா திலீபன் இங்கே உண்ணா நிலைப் போராட்டம் நடத்திய போது என் உடல் மட்டும் தான் தமிழகத்தில் இருந்தது,உயிரும் உணர்வும் இங்குதான் (தமிழீழம்)இருந்தது.நீண்ட நாள் என்மனதில் அழுந்திக் கிடந்த அந்த உணர்வை உயிப்புடன் வெளிப்படுத்த முடிந்தது’என்று கூறினேன்.நீண்ட நேரம் எங்கள் உணர்வலைகள் அந்த நினைவுகளில்…அதன் பிறகு தமிழீழத்தில் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட போது வேறு எங்கையும் விடதமிழீழ மக்களால் மிகவும் ஆழமாக உள்வாங்கப்பட்டது. தலைவர் கேட்ட அதே கேள்வியை மக்களும் கேட்டார்கள்.மூத்த போராளிகளும் கேட்டார்கள்