அனைத்துலக ரீதியிலான தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 27வது நினைவு வணக்கம் இன்று  நடை பெறுகிறது.
அந்தவைகையில் இன்று   (26-09-2014) கலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை சென்னை செங்கொடி அரங்கம் கோயம்பேட்டில் தமிழக மாணவர்களால் அடையாள உண்ணா நோன்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை  8 மணிக்கு சென்னை செங்கொடி அரங்கதிற்கு மாணவர்கள் மற்றும் உணர்வாளர்கள் உண்ணா நோன்பு இருபதற்க சென்று இருந்தனர்.

மாணவர்கள் நினைவு வீரவணக்க நிகழ்விற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை காலை 8.30 மணியளவில் அரங்கத்திற்குள் நுழைந்த தமிழக காவல்துறையினர் அங்கிருந்த மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழுணர்வாளர்களையும் கைது செய்து அருகில் உள்ளவெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

மண்டபத்தில் மாணவர்கள்   தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் வீரச்சாவடைந்த நேரம் சரியாக 10.48 மணிக்கு எழுந்து நின்று வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னர் அன்கு சென்ற தலைவர்கள் அனைவரும்  வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் அனைவரும் உறுதி மொழி எடுத்துகொன்டனர்.

கைது செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பழ நெடுமாறன் , ஓவியர்  வீரசந்தானம்  , மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் , இயக்குனர் வ.கௌதமன் , தமிழர் முன்னேற்றப்படை கி.வீராலச்சுமி , குடந்தை அரசன் ,  அங்கயற்கண்ணி , தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் வேணுகோபால் , தமிழர் விடுதலைகழகம் சுந்தர மூர்த்தி ,  புலவர் இரத்தினவேல், கூடங்குள அணு  உலைக்கு  எதிரான போராட்டக்குழு சு.ப உதயகுமார் , முகிலன் , சுந்தர ராஜன் ,மே 17 திருமுருகன் ஆகியோர் மாணவர்களுடன் சேர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபடுகினர்னர்.

மேலும் பலர் அங்கு வந்துகொண்டு உள்ளனர். என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


நன்றி:பதிவு