வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழர்களுக்கு எதிரான  இன அழிப்பு தொடர்பில் ஐ. நா வின் மனித உரிமைகள் பேரவையின்,  முக்கிய உயரதிகாரி ஒருவரிடம் ஆவணங்களுடன் நேரில் சாட்சியமளித்துள்ளார். ஜெனீவாவில் கடந்த 19/09/2014 அன்று பிற்பகல் 2.30 தொடக்கம் பிற்பகல் 4.45 வரை  வாய்மூல சாட்சியம் வழங்கியதோடு  40 பக்க ஆதாரங்களும் வழங்கப்பட்டதாக தெரியவருகிறது.

நேற்றைய தினம் தாயகம் திரும்பிய ரவிகரனிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி, இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விடயங்கள், புலனாய்வுத்துறையால்  தொடரும் அச்சுறுத்தல்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நில அபகரிப்பு விடயங்கள்,கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் , தமிழர் தாயகப்பகுதியில் இனப்பரம்பல் கோலம் மாற்றப்படும் நிலை, தமிழர் கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் சாட்சியமளித்துள்ளதாக தெரிய வருகிறது.  வலிமையான ஆதாரங்களை உள்ளடக்கிய 40 பக்க ஆவணங்களும் சேர்ப்பிக்கப்பட்டுள்ளன .