ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை!! 100 கோடி அபராதம்!! முதல்வர் பதவியும் பறிப்பு! September 28, 2014 News வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களைத் சேர்த்தமைக்கான தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100 கோடி இந்திய ரூபாக்களையும் அபராதமாக விதித்துள்ளது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஒரு அதிரடியான தீர்பை வழங்கியுள்ளது. இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக முதல்வராக இருந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 ஆண்டு வரையான காலப்பகுதியில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்ந்தார் என்று சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகள் நடத்தப்பட்ட நிலையில் இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. முதலில் பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார். மேலும் மாலை 3 மணிக்கு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் மாலை 5 மணியளவில்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோய்விட்டது. மேலும் சிறீரங்கத்தின் எம்.எல்.ஏ பதவியையும் இழக்கிறார். இதனால் இப்பகுதியில் விரைவில் எம்.ஏல்.ஏ கான தேர்தல் நடைபெறும் என எதிர்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டிய முடியாது. ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது தீர்பின்போது ஜெயலலிதா மயங்கி வீழ்ந்தாக தமிழகத்தின் தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. தீர்ப்பின் பின்னர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பரபரப்பான தீர்பை அடுத்து தமிழகத்தில் பல இடங்களிலும் கலகலங்கள் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க ஆதரவாளர்களினால் கடை அடைப்புகள் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியன் சுவாமியினுடைய கொடும்பாவிகள் எரிப்பு, பேருந்துகள் மீது கல்வீச்சுகள், பேருந்துகள் எரிப்பு, சாலை மறியல்கள் என்பன நடத்தப்பட்டுள்ளன.