தமிழகத்தின் முதலமைச்சர் வெற்றிடத்திற்கான பிரச்சினைக்கு முடிவுகாணப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலையத்தில் இன்று மாலை நடைபெற்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சருக்கான தேர்வு குறித்து ஆராயப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள், தே.மு.தி.மு அதிருப்பதியான சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.கவில் இணைந்து டி.ஜி.பி நட்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் குழு ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து புதிய முதல்வர் தேர்வுக்கான கடிதத்தைக் கொடுக்கிறது. இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார்.

இதேநேரம் இன்றைய கூட்டத்தில் பா.ஜ.க எதிராக கோசங்களையும், முழக்கங்களையும் அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள் எழுப்பியிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

தற்பொழுது தமிழ்நாடு ஆளுநர் ரோசையை சந்தித்து திரும்பியுள்ளார். ஆளுநர் ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை விடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.