தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் உண்ண நிலை போராட்டத்தினோடு உலகத்திற்கு அகிம்சைப்போராட்டத்தின் புனிதத்தை கற்றுக்கொடுத்த தியாகதீபம் திலீபனின் நினைவுநாளில் தமிழ்மக்களின் விடுதலையை வலியுறுத்தி உலகமெங்கும் மக்கள் எழுச்சிப்போராட்டங்களும் நினைவு நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது.

நோர்வேயிலும் விடுதலைக்காக வீழ்ந்த வீரனின் புனிநாளில் 26.09.14 அன்று அடையாள உண்ணாநிலைப்போராட்டம் மக்களால் நினைவுகோரப்பட்டதோடு மறுநாள(27.09.14) மதியம் 1100 மணியில் இருந்து 1230 மணிவரை மரம் நாட்டும் நிகழ்வு மாவீரர்களினதும் மக்களினதும் நினைவாக லொறன்ஸ்குக் எனும் இடத்தில் இடம்பெற்றது. இந்த மரமநடுகை நிகழ்வின்போது லொறன்ஸ்குக் உதவி மேயர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தினை சிதைப்பதர்க்கு சிறீலங்கா அரசுக்கு உறுதுணையாக நின்ற உலக நாடுகளின் தெருக்களில் நின்று எமது விடுதலைக்கு நீதிவேண்டி அவர்களின் இதயவாசல் திறக்கும் வரை எமது விடுதலைக்கான முழக்கம் ஒலிப்பதோடு விடுதலைப்போராட்டத்திற்கான நினைவுச்சின்னங்களையும் நிறுவுகின்ற பணிகளை முன்னெடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு நோர்வேயில் முதன் முதலாக பொது இடமொன்றில் மரம் நடப்பட்டுள்ளது.இவ்விடமானது எதிர்காலத்தில் எமது போராட்டவரலாற்றின் அடையாள சின்னமாகவும் பராமரிக்கப்பட இருக்கின்றது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு நினைவெழுச்சி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயு, முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி, தேசத்தின் நாயகர்கள் குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள், லெப்.கேணல் நாதன் மற்றும் கப்ரன் கஜன் ஆகிய மாவீரர்களும் நினைவு கூரப்பட்டனர். 

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்கமைப்பில், ஒஸ்லோ குறுறூட் சமூக மண்டபத்தில் நடைபெற்ற இந் நினைவெழுச்சி நிகழ்வில்  நுற்றுக்கணக்கான நோர்வே வாழ் தமிழீழ மக்கள் பங்கேற்றனர்.

சுடர் வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், அனைத்து மக்களும் லெப்.கேணல் திலீபன் உட்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து தியாகி திலீபன், கேணல் சங்கர், 2ஆம் லெப். மாலதி, குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் போராட்டச் செயற்பாடுகள், ஈகச் சிறப்புகளையும் எடுத்தியம்பும் வரலாறு தந்த வல்லமைகள் ஒளிப்பட விபரணம் திரையிடப்பட்டன.

தொடாந்து எழுச்சி நடனங்கள் எழுச்சிகானங்கள் கவிதை சிறப்புரையென மாவீரக்கடவுள்களின் வீரத்தையும் தியாகத்தையும் கனவையும் பறைசாற்றிசென்றது.

சிறப்புரையை அரசியல் ஆய்வாளர் நிர்மானுயன் அவர்கள் நிகழ்த்தி இருந்தார் அவர் தன்னுடைய உரையில் சிறீலங்காவின் உளவியல் போர் தொடர்பாகவும் அதனை மக்கள் எதிர்கொள்ள மனோபலத்துடன் இருக்கவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தியதோடு முள்ளிவாய்காலோடு போர் முடிந்துவிட்டதாக ஒவ்வொருவரும் தனிப்பட்ட முடிவில தளர்ந்துபோகாமல் தமிழீழத்தின் விடியலுக்காக தெளிவான முடிவோடு தியாகம் செய்த தீரர்களின் மௌனத்திலிருந்து ஆன்மபலத்தோடு அரசியல் போர் புரிய செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல மக்களும் புரட்சிக்கு தயாரகி தீலீபன் கண்ட கனவை நனவாக்கவேண்டும் என தெரிவித்திருந்தார்.

நீண்ட உரையாற்றியிருந்த நிர்மானுயன் அவர்கள் காலத்தின் தேவைகருதிய கருத்துக்களை பதிவுசெய்திருந்தார்.

நினைவெழுச்சி நிகழ்வானது இளையவர்களின் படைப்பில் எமது தேசத்தின் தாகத்தை வெளிப்படுத்தியிருந்தது.என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு இந்த நிகழ்வை சிறப்புற நடாத்த உதவிய அனைவரையும் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் உங்கள் கரங்களை பற்றிக்கொள்கின்றோம்.