சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசன அமுலாக்கத்தை கண்காணிக்கும் ஐக்கிய நாடுகளின் குழு, சிறிலங்கா தொடர்பில் அடுத்த வாரம் ஆராயவுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி முதல் 31ம் திகதி வரையில், மனித உரிமைகள் குழுவின் கூட்டம் புருண்டியில் நடைபெறவுள்ளது.
இதன் போது 7ம் மற்றும் 8ம் திகதிகளில் சிறிலங்கா தொடர்பில் இந்த குழு ஆய்வு செய்யவிருக்கிறது.

இதில் சிறிலங்காவில் காணப்படும் மனித உரிமை நிலவரங்கள், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் 18 அமைப்புகள் முன்வைத்த அறிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

மேலும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றம் சிவில் அமைப்புகளின் அறிக்கைகளும் இந்த ஆய்வுக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

சிறிலங்காவில் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்பட்டமை, மனித உரிமைகள் காப்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா சிக்கலை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.