தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க தலைவருமான ஜெயலலிதா ஜெயராமை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஓர் அரசியல்வாதிக்கும் தகுதியில்லை. அவரைப் பார்த்து எள்ளி நகையாடவும் சாபமிடவும் இங்கே உள்ள சில அரசாங்க எலிகள் கிளம்பியுள்ளதை பார்க்கும் போது விசித்திரமாக இருக்கின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் இன்று(01) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஊழல், குடும்ப ஆட்சி, வீண் விரயம், அதிகார துஷ்பிரயோகம், எதிரணியினர் மீதான வன்முறை, ஊடக அடக்கு முறை, மனித உரிமை மீறல், சட்ட ஆட்சி இன்மை, சொந்த வயிற்றுப்பாட்டு தேவைக்காக சொந்த மக்களையே விற்று சாப்பிடும் அரசியல் ஆகியவற்றில் உலக சாதனை செய்துள்ள இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சணிம் அருகதை இல்லை.

ஜெயலலிதா எட்டு கோடி மக்களின் முதலமைச்சர் என்பதையும் தமிழக மக்களின் அறுதி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ள, இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவர் என்பதையும் இந்த எலிகளுக்கு நான் ஞாபகமூட்டுக்கின்றேன்.