சிறிலங்காவில் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா தொடர்பில் ஆய்வு செய்வதற்காக மனித உரிமைகள் குழு இன்று ஜெனீவாவில் ஒன்று கூடுவதற்கு முன்னதாக, தனிப்பட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது உரையாற்றி இருந்த மனித உரிமைகள் குழுவின் தலைவர் சேர் நைகல் ரொட்லி இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், துன்புறுத்தல்கள், அரச சார்பற்ற நிறுவனங்கு எதிரான கட்டுப்பாடுகள் போன்றவற்றை பெரிதுபடுத்தாமல் விட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.