பயங்கரவாத் தடைச் சட்டத்தை சிறீலங்கா உடனடியாக நீக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமைகள்

பயங்கரவாதத் தடை சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறிலங்காவின் அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஆய்வின் போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் தொடர்ச்சியாக காணாமல் போதல் சமப்வங்கள் இடம்பெற்று வருகின்றன.

பாதுகாப்பு தரப்பினரும், அவர்களோடு இணைந்து பணியாற்றுகின்ற துணை ஆயுதக் குழுக்களும் வெள்ளை வான் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர்.

சர்வதேச விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பதில்லை.

மேலும் தனி மனித சுதந்திரம் மற்றும் உரிமைகளை வழங்குவதாக சிறிலங்காவினால் வழங்கப்பட்டிருந்தஉறுதி மொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று, மனித உரிமைகள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.