சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து பிரித்தானிய அரசாங்கம் அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் பொதுநலவாய மற்றும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்திய வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்றும், விசாரணையாளர்களுக்கு வீசா அனுமதி வழங்கப் போவதில்லை என்றும் சிறிலங்கா முன்னதாகவே அறிவித்திருந்தது.

இது தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் குழு ஒன்று, இந்த விசாரணைகளுக்கு சிறிலங்கா ஒத்துழைக்க வேண்டும் என்பதை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.