சமாதானத்திற்கான நோபல் பரிசை பெறும் பான் கீ மூனின் கனவு ஈழத்தமிழர் விடயத்தினால் உடைந்தது!! October 10, 2014 News இந்த வருடத்தின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறும் பான் கீ மூனின் கனவு ஈழத் தமிழர்களின் விடயத்தினால் கனவாகி போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ஊடகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த வருடம் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு வழங்கப்படும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு கண்ட தோல்வி, ஹெய்ட்டியில் கொளராவை தடுக்க நடவடிக்கை எடுக்காமை, வடகொரியா மற்றும் தென்கொரியாக்களுக்கு இடையிலான பிரச்சினையில் தென்கொரியாவுக்கு சார்பாக செயற்பட்டமை போன்ற காரணங்களால் அவருக்கு இந்த விருதை வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோபல் பரிசின் ஆலோசகர்கள் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளனர். எனவே அவருக்கு அடுத்த வரும் சமாதானத்துக்காக அன்றி, வேறொரு துறையில் நோபல் பரிசை வழங்குவதற்கு திட்டமிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.