இலங்கையில் நீதிக்கான தேடல் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன மிகுந்த அவசரமான அவசியமாக மாற்றமடைந்துள்ளது என செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார். பல வழிகளில் கடந்த சில வாரங்கள் ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு சர்வதேச அரங்களில் பாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. சர்வதேச விமர்சனங்களுக்கு நிராகரிப்பு மற்றும் உண்மையை மறைக்கும் கூற்றுக்கள், முடிவில்லா விசாலாமானதும் போலியானதுமான விசாரணைகள் மற்றும் வாக்குறுதிகள மூலம் இலங்கை அரசாங்கம் பதிலளித்து வருகின்றது.

மோசமான மனித உரிமை குறித்த சர்வதேச விமர்சனங்கள் தேசத்திற்கு எதிரான தாக்குதல்களாக அரசாங்கம் உள்நாட்டு ரீதியில் காண்பித்துக்கொள்கின்றது. சிங்கள பெரும்பான்மையினர் மீதான தாக்குதல்களாக வெளிக்காட்டி, அந்த சமூகத்தின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

எனினும் தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது, அரசாங்கம் அடக்குமுறைகளை பிரயோகித்துவருகின்றது. காணி அபகரிப்பு, சனத்தொகை பரம்பலில்மாற்றம், பாலியல் வன்முறை, சிங்கள குடும்பங்களை குடியேற்றல், மரபு ரீதியான தமிழ் சமூகத்தை ஒரங்கட்டுதல் போன்ற பல்வேறு வழிகளில் பிராந்தியத்தின் அடிப்படை அடையாளங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. காவி உடை தரித்த குண்டர் கூட்டமான பொதுபல சேனா இயக்கத்தை ஊக்கப்படுத்தி அவர்களின் ஊடாகவும் சிறுபான்மை சமூகங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. குறிப்பாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்கள் மீது இந்த அமைப்பு கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கின்றது.

இதுவே, உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு உள்ள பிரதான பிரச்சினையாகும். கால நேரத்தை விரயமாக்கக் கூடிய சூழ்நிலை கிடையாது. கால நேரத்தை விரயமாக்குவதன் மூலம் தாங்கள் எதிர்பார்த்த இலக்குகளை வடக்கு கிழக்கில் அடைந்துகொள்ள முடியும் என ராஜபக்ஸக்கள் கருதுகின்றனர்.ஆனால் உண்மையில் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கை தொடர்பான ஐக்கிய நாhடுகள் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் இலங்கை மீது மிகவும் கடுமையான விமர்சனங்கள் வெளிடப்பட்டிருந்தன. சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய அல்லது விசாரணைகளில் பங்கேற்கக் கூடியவர்கள் எனக் கருதப்படும் மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூக செயற்பாட்டாhகள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான அடக்குமுறைகள், அழுத்தங்கள், ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகவும் இது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறப்பிட்டார். அரச மற்றும் அரச சாரா தரப்பினர் அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர் என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சர்வதேச விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு புறம்பாக செயற்பட்டதாகக் கருதி அவ்வாறனவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக அமைச்சர் விடுத்த அறிவிப்பை அவர் சுட்க்காட்டினார். சிவில் சமூகங்களின் கூட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதுடன் தமிழ் அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.