ஒரு இனத்துக்கு சொந்தமான காணிகளையும், சொத்துக்களையும் ஆக்கிரமிப்பது, சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்தை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

எனவே இதற்கு எதிராக சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்தி வழக்கு தொடரவிருப்பதாக அவர் கூறி இருக்கிறார். அதேநேரம், ஐக்கிய நாடுகளின் இனவழிப்பு தொடர்பான சிறப்பு ஆணையாளரிடமும் இது தொடர்பில் முறையிடவிருப்பதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்காக கடிதம் ஒன்றை தயார் செய்து, ஏனைய வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் கையெழுத்துக்களைப் பெற்று, இனவழிப்பு தொடர்பான ஆணையாளரிடம் கையளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.