எபோலா வைரஸ்:

கடந்த 1976ம் ஆண்டு தான் எபோலா வைரஸ் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் விலங்குகளில் இருந்து தான் மனிதர்களுக்கு பரவுகிறது.

 

மனிதர்களுக்கு எப்படி?

இந்தக் கிருமியானது தொற்று ஏற்பட்டுள்ள ஒரு விலங்கின் ரத்தம் அல்லது உடல் திரவங்கள் ஆகியவற்றுடனான தொடர்பு காரணமாக சுவீகரிக்கப்படலாம்.

 

மனிதர்களிடையே:

இத்தீநுண்ம நோய் வாய்ப்பட்ட நோயாளியின் நீர்மங்களுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு அவற்றின் மூலமாக தீ நுண்மம் உட்செல்கிறது.

இது காற்றின் மூலமாகப் பரவுவதில்லை.

 

எபோலா நோய்:

எபோலா வைரஸ் நோய் முன்னதாக எபோலா காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது. இந்த நோய் வந்தால் 50% லிருந்து 90% சதவீதம் மரணத்தில் முடியும்.

 

அறிகுறிகள்:

ஒருவருக்கு எபோலா பற்றும்போது முதல் அறிகுறிகள் மற்ற நோய்களை ஒத்திருக்கும். எபோலா வைரஸ் தாக்கினால் காய்ச்சல், உடல் சோர்வு, தசை வலி, தொண்டை வலி, தலைவலி ஆகியவை எற்படும். இது தான் எபோலா நோயின் அறிகுறிகள்.

Symptoms_of_ebola_(vector_image)-ta.svg-2

 

பின்னர்:

காய்ச்சல், வலியோடு நின்றுவிடாமல் அடுத்ததாக வாந்தி, பேதி, சிறுநீரக மற்றும் நுரையீரல் செயல் இழப்பு, சில நேரம் வெளி மற்றும் உடலுக்குள் ரத்தக்கசிவு ஏற்படும்.

 

சிகிச்சை:

நோய்க்கென குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை; பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் முயற்சிகளில் வாய் வழியான நீர் மறு நிறைப்பு சிகிச்சைமுறை அல்லது ஊசிவழியாக உட்புகுத்தல் செய்யப்படும் திரவங்கள் ஆகிய இவற்றில் ஒன்றைகொடுப்பது அடங்கும். இந்த நோயானது மிக உயரிய இறப்பு விகிதம்கொண்டுள்ளது: இந்தக் கிருமியினால் தொற்றப்பட்டவர்களில் 50% லிருந்து 90% வரையான மக்களை நோய் பெரும்பாலும் மாய்த்து விடுகிறது.

 

தடுப்பு மருந்து:

எபோலா நோயை தடுக்க மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்ட போதிலும் அவை சந்தையில் தற்போது இல்லை.