ஐரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் அமைப்புக்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சேர்க்கப்பட்டிருந்த முடிவை இரத்து செய்து லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பில் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பு தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மாவீரர்களுக்கும் , மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் . தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக திறமையாக வழக்காடிய மூன்று வழக்கறிஞர்கள் Victor Koppe , Thamara Buruma, மற்றும் A.Marike van Eik ஆகியோர்களுக்கு உலகத்தமிழர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள் .

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிப்பிட்ட சில நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக இயக்கப்படும் குறிப்பிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொருத்தமற்றவை எனவும் அவற்றை ரத்து செய்யவும் ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படுவதில் கையாளப்பட்டிருந்த நடைமுறையில் தவறுகள் இருக்கின்ற காரணத்தால், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.

லக்ஸம்பேர்க்கிலுள்ள ஐரோப்பிய நீதிமன்றதின் தீர்ப்பின் விடையமாக இவ் வழக்கை வாதாடிய மூன்று வழக்கறிஞர்களில் ஒருவரான Thamara Buruma அவர்களின் காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு ஆங்கிலத்தில் இருக்கின்றது முழுமையான விபரங்களை PDF வடித்தில் இருக்கின்றது. கீழ்வரும் இணைப்பை அழுத்திப் பார்க்கலாம்.