ஐரோப்பிய நீதிமன்றத் தீர்ப்பு புலம்பெயர்ந்த ஈழத்தமிழரது அரசியலில் புதிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்: – கஜேந்திரகுமார் October 18, 2014 News ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பானது தமிழ் மக்கள் தமது அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைப்பதற்கு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாத தடைப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு மேற்கொண்ட முறைமை தவறானது என ஜரோப்பிய ஒன்றியப் பொது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறிபிட்டுள்ளர். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் இந்தத் தீர்ப்பு நிரந்தரமாக அமையும் என்றால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரது அரசியலில் புதிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் நிலை உருவாகும் என நாங்கள் கருதுகின்றோம் என கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார். மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தாயக மக்களது சாட்சியங்களை பதிவு செய்வதற்கான வேலைத் திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றோம். மக்கள் தொடர்ந்து தமது சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.