அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஜேம்ஸ் பெக்கர், ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமையை வெளிப்படுத்தும் த நோ பயர்சோன் காணொளியை பார்த்து கண்ணீர்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ரவுன் இன்டர்நெசனல்ஸ் என்று மிகப்பெரிய சூதாட்ட மையத்தின் சொந்தகாரரான ஜேம்ஸ் பெக்கர், சிறிலங்காவில் 500 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கெசினோ ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரை நோ பயர் சோன் காணொளியை பார்வையிட்டு, சிறிலங்காவையும், ஈழத தமிழர்களையும் இலாபத்துக்கு அப்பால் சென்று நோக்குமாறு அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது.

இதன்படி கடந்த வாரம் அவர் இந்த காணொளியை பார்வையிட்டதன் பின்னர், அகதிகள் பேரவையின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த காணொளியை பார்த்து தமது இரத்தம் உரைந்து போனதாக அவர் இதன் போது கூறி இருக்கிறார்.

அத்துடன் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.