சிறிலங்காவுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சிறிலங்காவில் இருந்து மீனினங்களை இறக்குமதி செய்வதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

சர்வதேச சட்டத்திட்டங்களை மதித்து நடக்காமையே இதற்காக காரணம் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் சிறிலங்கா தொடர்பில் மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் இதன் காரணமாக அடுத்தடுத்து மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.