இலங்கை உட்பட மூன்று நாடுகள் மீது மூன்று விஷேட குழுக்கள் ஊடாக விசாரணை- மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் October 23, 2014 News இலங்கை உட்பட மூன்று நாடுகள் மீது மூன்று விஷேட குழுக்கள் ஊடாக விசாரணை- மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விஷேட குழுக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். இலங்கை, சிரியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய நாடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவனீதம் பிள்ளையின் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விடையம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே ஹூசைன் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் மனித உரிமைகள் ஆணையகத்தால் மேற்கொள்ளப்பட்ட விடையங்களை உள்ளடக்கியதாகும்.