இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியமளிக்கும் கால எல்லையை மேலும் ஒரு மாதம் நீடித்து உதவுமாறு கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சாட்சியமளிக்கும் கால எல்லை இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் அதற்கான கால எல்லையை மேலும் ஒரு மாதகாலம் நீடிக்குமாறு கோரியே மனித உரிமை ஆணையாளருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கையில் சாட்சியமளிப்பவர்களுக்கு அச்சுறுத்தல்கள், இடையூறுகள் இருப்பதால் சாட்சியமளிப்பவர்களில் இன்னும் பலர் சாட்சியமளிக்காது இருக்கின்றனர். எனவே சாட்சியமளிக்கும் கால எல்லையை மேலும் ஒரு மாத காலம் நீடித்து உதவுமாறு அவர் கடிதம் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைக் கோரியுள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே தமிழகம் உட்பட பல இடங்களிலுமிருந்து நீடிப்பு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.