ராஜபக்சேவின் நிறுவனத்துடன் தொடர்பு வைத்துள்ள லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரவிருந்த ‘கத்தி’ திரைப்படத்தை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்து, பல போரட்டங்களை மேற்கொண்ட மாணவர்கள் செம்பியன், பிரதீப் மற்றும் பிரபா ஆகியோர் நேற்று நள்ளிரவுவில் சிறப்புப் பிரிவினரால் அவர்களது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கைது செய்து வைத்திருக்கும் இடம் கூட இது வரை தெரிவிக்கப்படவில்லை. கைது நடவடிக்கையில் முன்னர் இவர்களி வீட்டுக்குச் சென்ற நபர்கள் வெவ்வேறு புனைக் கதைகளைக் கூறிய வேவு பார்த்துள்ளார்கள். அத்துடன் பிரபாவின் தந்தை மற்றும் செம்பியனின் தம்பி ஆகியோரைப் பிடித்துக் வைத்துக் கொண்டு நீங்கள் வந்தால் தான் இவர்களை விடுவோம் என விரட்டி பிரபாவையும் செம்பியனையும் வரவழைத்துக் கைது செய்துள்ளனர்.

வீட்டிலிருந்து கைது செய்து கொண்டு செல்லப்பட்டவர்களை கைது செய்ததையே மறுக்கிறது தமிழக காவல்துறை. எனினும் இவர்கள் இந்தியாவின் மத்திய தேசிய புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் மேல் 147,148,341,294(b) IPC மற்றும் TNDPP(DL) ACT 1984 ஆகிய பிரிவுகளில் சட்டவிரோத ஒன்று கூடல், வெடிமருந்து பிரிவு, கொலை முயற்சி வழக்கு, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தமிழகத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இறுதியாகக் கிடைத்த தகவலின்படி இன்று பிற்பகல் இரகசியமாக நீதியாளர் முன் நிறுத்தப்பட்ட மூன்று மாணவர்களும் புலால் சிறைக்கு அனுப்பப்பட்டு சிறை வைக்கப்பட்டதாக உள்ளிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.