சிறிலங்காவுக்கு எதிராக பல நாடுகள் பயண எச்சரிக்கையை விடுத்திருக்கின்றன.

வடமாகாணத்துக்கு வெளிநாட்டவர்கள் விஜயம் செய்ய சிறிலங்கா அரசாங்கம் நிபந்தனைகளை விதித்திருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இன்றி வெளிநாட்டு பிரஜைகள் யாரும் வடக்கிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை அடுத்து ஏற்கனவே கனடா அரசாங்கம் சிறிலங்கா தொடர்பில் தமது நாட்டின் பிரஜைகளை எச்சரித்திருந்தது.

தற்போது பிரித்தானியா பயண எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது.

சிறிலங்காவின் வடபிராந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக இராணுவ கெடுபிடிகள் இருப்பதாகவும், இதனால் தமது நாட்டு பிரஜைகள் சிறிலங்கா செல்லும் போது மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அந்த நாடுகள் கோரி இருக்கினறன.