தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் பிரித்தானியா மீளாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரக பேச்சாளர் ஒருவரின் கருத்தை அடுத்து இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பு குறித்து தற்போது பிரித்தானியா ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு அப்பால், பிரித்தானியாவின் 2000ம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் வழங்கியுள்ள குறித்த தீர்ப்பு அரசியல் தலையீடுகள் இன்றி, சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தீர்ப்பின் அடிப்படையில், பிரித்தானியாவின் தடை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.