கனேடிய தேர்தல் களத்தில் வெற்றிகொண்ட மூன்று தமிழர்கள்

கனடாவின் ரொறொன்ரோ நகர தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சிக் கட்டமைப்புக்களிற்கான நகரசபைத் தேர்தல் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதில் மூன்று தமிழர்கள் மாநகர சபைத் தேர்தலிலும், கல்விச் சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பிரதேசத்தில் கவுன்சிலராக லோகன் கணபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே போல் மார்க்கம் கல்விச் சபைக்கு Juanita Nathan மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பார்த்தி கந்தவேள் ரொறன்ரோ கல்விச் சபைக்குத் தெரிவாகி உள்ளார்.
30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ரொறன்ரோ மாநகரில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற மூவரும் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொண்டனர்.