சிறீலங்கா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கடலுணவுத் தடையை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறீலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்களை மீறியமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறீலங்காவுக்கு வருடாந்தம் 75 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நட்டத்தை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு, உடனடியாக இந்த தடையில் இருந்து விடுதலைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.