தாமதமாகக் கிடைக்கின்ற யுத்தக்குற்றச் சாட்சி ஆவணங்களை நிராகரிகப் போவதில்லை – மனித உரிமைகள் பேச்சாளர் ரூபர்ட் கொள்வில் November 2, 2014 News தாமதமாக கிடைக்கின்ற யுத்தகுற்றச் சாட்சி ஆவணங்களை நிராகரிக்கப் போவதில்லை என்று, சிறிலங்காவுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைக் குழு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேச்சாளர் ரூபர்ட் கொள்வில் இதனை கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். யுத்த குற்ற சாட்சி ஆவணங்களை கையளிக்கும் தினம்கடந்த மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைந்தது. எனினும் இந்த காலப்பகுதியில் பெறப்பட்ட ஆவணங்களை பகுப்பாய்வு செய்து, இறுதி அறிக்கை சமர்ப்பிதற்கு விசாரணைக்குழுவுக்கு மேலும் காலம் இருக்கிறது. எனவே தாமதாக கிடைக்கின்ற ஆவணங்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்றும், அவை பகுப்பாய்வுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.