பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதான சி. கிருஸ்ணராசா சட்ட உதவிகனைப் பெறுவதற்கு தடை! November 3, 2014 News பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதான சி. கிருஸ்ணராசா சட்ட உதவிகனைப் பெறுவதற்கு தடை:- இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஜ.நா விசாரணைக்கு சாட்சியமளிக்கும் படிவங்களைத் தம்வசம் வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டில் பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சி. கிருஸ்ணராசா சட்ட உதவிகனைப் பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இச்சம்பவமானது அடிப்படை மனித உரிமை மீறல் என்றும், கைது செய்யப்படடவருக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கான வேலைத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜ.நா விசாரணைக்காக மக்கள் சாட்சியங்களை வழங்குவதற்கு கடந்த 31 ஆம் திகதி மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாட்சியங்கள் வழங்குவதற்கான படிவங்களை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிராஞ்சியினைச் சேர்ந்த 57 வயதுடைய சின்னத்தப்பி கிருஸ்ணராசா என்பவர் இரணைமாதா நகரினில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உடனடியாக வவுனியாவில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த நபரை சந்தித்து அவருக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்காக கடந்த முதலாம் திகதி கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவுக்குச் சென்றிருந்த சட்டத்தரணியை சந்திக்க தடுத்து வைக்கப்பட்ட குறித்த நபருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் சட்டத்தரணியைச் சந்தித்து சட்ட உதவிகளை பெற்றுக் கொள்பவதற்கான உரிமை உள்ளது. இருப்பினும் அவருக்கு அவ்வுரிமையினை பயங்கரவாத குற்றத்தடுப்பு காவல்துறையினர் வழங்காமல் மறுத்துள்ளனர். இது அடிப்படை மனித உரிமை மீறலாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.