இந்தியத் தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.protest_india_001

இந்த நிகழ்வில், இனப்படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் பிரதான தேசிய இனங்களான சீக்கியர்கள், காஷ்மீரியர்கள், நாகர்கள், தமிழர்கள் பங்குபற்றியுள்ளனர்.

இதேவேளை, இந்தப் பேரணியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களுடன் சீக்கிய இன சகோதரர்களும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப் படத்தினை ஏந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.