இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பெரும் உதவியாக இருந்தார்

என்று பிரதான வன தலைமைப் பாதுகாவலரும், தமிழ்நாட்டின் தலைமை வனவாழ் உயிரினங்களின் மேற்பார்வையாளருமான வி.கே.மெல்கானி தெரிவித்துள்ளார்.

கடலாமைகளைப் பிடித்தலைத் தடுத்தல் மற்றும் மீன்பிடி தொடர்பான நடைமுறைகள் குறித்து, இந்தியக் கடலோரக் காவல்படை, வன, மீன்பிடி, காவல்துறை இளம் அதிகாரிகளுக்கு அளித்த ஒரு நாள் பயிற்சிப் பட்டறையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்றுமுன்தினம் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், அளவுக்கதிகமான மீன்பிடி,  தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்த வரை, இலங்கையை ஒட்டிய மன்னார் வளைகுடா வரை, கடல்வாழ் பாலூட்டிகளுக்குப் பாதுகாப்பான இடமாக விளங்கியது.

அந்தப் பகுதியில், பாதுகாப்பும் ரோந்து நடவடிக்கைகளும், அதிகரித்திருந்தன.

இதனால், அந்தப் பகுதியில், கடல்வாழ் உயிரினங்களுக்கு வளமான கடல் வாழ்க்கை கிடைத்திருந்தது.

அதற்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் எமக்கு உதவியிருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- அ.எழிலரசன்