கேணல் பருதி அவர்களின் நினைவுக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்து திருவுருவப்படம் சிங்களக் கைக்கூலிகளால் அகற்றப்பட்டதை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கண்டித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் முழுவிபரமும் வருமாறு:-

நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகள், சந்துகளில், சுவர்களில், நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன

-தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்-

நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை துரோகமும் இழைக்கவில்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கவும் தயங்கமாட்டோம்

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் –

03-11-2014

பிரான்சுக்கிளை பொறுப்பாளராக 2004 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை கடமையாற்றிய கேணல் பரிதி அவர்கள் 08.11.2012ல் சிங்களக் கைகூலிகளால் சுட்டுகொலை செய்யப்பட்டார். அவர்கள் இருந்த காலத்தில் தமிழ்ம கக்ளுக்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் ஆற்றப்பட்ட சேவையை நினைவு கூர்ந்து தமிழ் மகக்ளால் உருவாக்கப்பட்ட கேணல் பரிதியின் அடையாளச் சின்னம் சிங்களக் கைக்கூலிகளால் 01.11.2014ல் முற்றாக பிடுங்கி அகற்பட்டிருந்தது. இது தமிழ்மகக்ளின் உணர்வுகளையும் அவர்களுடைய குறிக்கோள்களையும் சிதைப்பதாகவும்ப யமுறுத்தும் செயலாகவே பார்கக்ப்படுகின்றது.

சிறீலங்கா அரசானது எமது தாயகத்தில் ஊடகங்களின் வாய்க்கு பூட்டுப்போட்டு விட்டு எமது மாவீரர்களின் துயிலும் நிலங்களை சிதைத்து அதன்மேல் உல்லாச விடுதிகளையும் இராணுவ முகாம்களையும் அமைத்து தமிழரின் ஆன்மா மேல் ஆணவமாக இருக்கிறது. அதே பாணியில் புலம்பெயர் மண்ணிலும் எமக்காக குரல் கொடுத்த ஊடகங்களை மிரட்டி அவைகளையும் செயலிழக்கச் செய்து தனது வன்முறை பாணியை தொடர்வதின் வெளிப்பாடே கேணல். பரிதியின் அடையாளச்சின்னம் பிடுங்கிச் செல்லப்பட்டது.

புலம்பெயர் மண்ணில் நவம்பர் மாதம் சிறீலங்கா அரசால் பயமுறுத்தல்களை தமிழர் நாம் எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளோம். கேணல். பரிதி 2011ல் கூர் ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டதும், 2012 ல் படுகொலை செய்யப்பட்டதும் 2014 அதே மாதம் அவருடைய நினைவுச் சின்னம் பிடுங்கிச் செல்லப்பட்டதும் எமது மாவீரர்களை நினைவு கூரும் நவம்பர் மாத செயற்பாடுகளை முடக்குவதற்கான எதிர்வினைகளாகும். அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றத்தால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயகக்ம் அல்ல அது ஒரு விடுதலைப் போராட்ட இயகக்கம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கும் வேளையில் சிறீலங்கா அரசு தனது அரச பயங்கரவாதத்தை சர்வதேச ரீதியில் தனது கைக்கூலிகளூடாக நடாத்திவருவதையும், கேணல். பரிதியினுடைய நினைவுச் சின்னம் பிடுங்கிச் செல்லப்பட்டதையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது போராட்டமானது சரியான பாதையில் கொண்டு செல்லப்படுவது சிங்களத்திற்கு இடையூறாக உள்ளதின் வெளிப்பாடுகளே இப்படியான அநாகரீகச் செயற்பாடுகளாகும். இச் செயற்பாடுகளூடாக எம்மை பயமுறுத்துவதோடு செயற்பாடுகளிலிருந்து விலகி நிற்க வைப்பது அவர்களின் எண்ணம். இதனை நாம் தெளிவாக புரிந்து கொண்டு எமது போராட்டங்களை தொடர்வதும் அதற்கு பலம் சேர்ப்பதும் எமது கடமையாகும்.

“ தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ’’

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
பிரான்சு