தியாகி திலீபன் அவர்களின் நினைவாக பேர்லின் நகரில் உதைப்பந்தாட்டப் போட்டி

தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக ஐந்தாவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது .

தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது .இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மேற்பிரிவுக்கான 8 கழகங்களும் மற்றும் கீழ்ப்பிரிவுக்கான 6 கழகங்களும் பங்குபெற்றியது.

சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்களாக காணப்பட்டார்கள் . இவர்களை உலகளாவிய ரீதியில் உருவாக்கப்பட்ட தமிழீழம் தேசிய அணிக்கு பரிந்துரைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது .

தியாகி திலீபன் அவர்களின் நினைவாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக இப் போட்டி நிறைவு பெற்றது .