பேர்லின் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் கலைமாருதம் 2014

மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரம் கொடுக்கும் கலைமாருதம் 2014
-தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி

பேர்லின் நகரில் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு பேர்லின் கிளையினரின் ஒருங்கிணைப்பில் கலைமாருதம் 2014 மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது .

இவ் நிகழ்ச்சியின் ஊடாக கொஸ்லந்தை, மீரியாபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டில் இருந்து தாயக கலைஞர் TTN புகழ் தம்பையா தயாநிதி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு மக்களை சிரிக்கவும் அதேநேரத்தில் தாயக மக்களின் அவல நிலையை அரங்கத்தில் நிறுத்தி மக்கள் கண்ணீர் சிந்த சிந்திக்க வைத்ததும் மக்களின் உணர்வை உலுக்கியது.

கலைமாருதம் நிகழ்வில் பேர்லின் இளையோர்களின் பல்வேறு கலை ஆக்கங்கள் அரங்கத்தில் சிறப்பாக வழங்கப்பட்டது .புலம்பெயர் நாடுகளில் பிறந்து வாழ்ந்தாலும் தமது மரபுகள் மாறாத கலையம்சங்கள் மண்வாசனையோடு சிறுவர்களினால் காண்பிக்கப்பட்டது. பரத கலை,கிராமிய நடனங்கள், திரையிசை நடனம், நாடகம் என பல நிகழ்சிகள் பார்வையாளர்களின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது .

தாயக கலைஞர் TTN புகழ் தம்பையா தயாநிதி அவர்களின் நாடகத்தின் ஊடாக தமிழர்கள் தமது இன அடையாளத்தை உயிர்வாழ வைக்க தொடர்ந்து போராட வேண்டும் என்பதனை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார் .

நன்றி
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி